Tuesday, December 30, 2008

புத்தாண்டு வாழ்த்துகள்

பொங்கி வரும் காவேரி என
பொங்கட்டும் புது வாழ்வு
சீறிவரும் காளைபோல
சிரிக்கட்டும் புது வருடம்

வருகின்ற மகிழ்ச்சிகளை
மூளையில் வைப்போம்
வந்த துன்பங்களை
மூலையில் வைப்போம்

வீசுகின்ற தென்றலுக்கு
ஜன்னல் திறப்போம்
வீசிய சூறாவளிக்கு
வாதில் அடைப்போம்

வருகின்ற காலம்
வசந்த காலம் ஆகட்டும்
வீசுகின்ற காற்றெல்லாம்
தென்றல் காற்றாகட்டும்

வருகின்ற மழையால்
மரங்களெல்லாம் சிரிக்கட்டும்
வருடுகின்ற மகிழ்ச்சியால்
மனமெல்லாம் மகிழட்டும்

வருகின்ற புத்தாண்டு
புத்துணர்ச்சி கொடுக்கட்டும்
காழ்ப்புணர்ச்சி இல்லாமல்
விழிப்புணர்ச்சி உண்டாகட்டும்

கையில் காசு வைத்திருப்போர்
இல்லாதவர் பையில் வையுங்கள்
பையில் வைத்திருப்போர்
இல்லாதவர் கையில் கொடுங்கள்

கட்டுகின்ற கட்டிடமெல்லாம்
கல்விமையம் ஆகட்டும்
தீட்டுகின்ற திட்டமெல்லாம்
திறன்பட செயல்படட்டும்

சாதி மதம் இல்லையென
சான்றிதல் கொடுப்போம்
சமத்துவம் ஒன்றேயென
தம்பட்டம் அடிப்போம்

வறுமையே இல்லை என
வாழ்த்திடலாம் வாருங்கள்
திறமை இருக்கும் இடத்தை
போற்றிடலாம் வாருங்கள்

அநாதை இல்லங்களை
அரவணைக்க வாருங்கள்
ஊனமுற்ற குழந்தைகளுக்கு
ஊக்கம் கொடுக்க வாருங்கள்

அன்பிருக்கும் இடத்தை
ஆதரிப்போம் வாருங்கள்
குணம் இருக்கும் இடத்தை
கும்பிடலாம் வாருங்கள்

முதியோர் இல்லங்களை
மூட வைப்போம்
பெற்றோரை விரட்டியடித்த
மூடர்களை முதுகில் அடிப்போம்

பெற்ற தாய்க்கு
பெருமை சேர்ப்போம்
நற்ற மரக்கன்றை
நாளும் வளர்ப்போம்

கல்வி கற்றவரை
அரசியலுக்குத் தேர்ந்தெடுப்போம்
குடும்ப அரசியலுக்குக்
கொல்லிப் போடுவோம்

கலை வளர்க்கும்
கலைஞர்களை க்குவிப்போம்
கொலை செய்யும் வெறியர்களை
கூண்டோடு அழிப்போம்

வேலையில்லாத திண்டாட்டத்தை
வேரறுக்க செய்திடுவோம்
பட்டினிஇல்லாத பாரதத்தை
பரந்து விரியச்செய்வோம்

நோயுற்றுக் கிடப்போரை
நோகாமல் கவனித்திடுவோம்
பாய் எனக் கிடப்போரை
பரம்பால் புடைத்திடுவோம்

இல்லம் இல்லாதவர்க்கு
இருக்க இடம் கொடுப்போம்
கல்வி கல்லாதவர்க்கு
கல்வி கற்றுக்கொடுப்போம்

படிக்காதவர்களே இல்லை என
பறை சாற்றிடுவோம்
இல்லாதவர்களே இல்லை என
இதயம் திறந்து சொல்லிடுவோம்

நிழல் தரும் மரங்களை
நெடுகெங்கிலும் வைப்போம்
நிஜம் சொல்லும் மனிதர்களை
நெஞ்சத்தில் வைப்போம்

சுவை தரும் கனியை
தினம் தோறும் உண்போம்
சுகம் தரும் பாடலை
தினம்தோறும் கேட்போம்

--------------என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

என்றும் நட்புடன்...ராஜா பழனிசாமி

5 comments:

  1. // கட்டுகின்ற கட்டிடமெல்லாம்
    கல்விமையம் ஆகட்டும்
    தீட்டுகின்ற திட்டமெல்லாம்
    திறன்பட செயல்படட்டும் //

    மாடர்ன் டே பாரதியார் மாதிரி அனல் பறக்குது உங்க கவிதையில்ல...
    புத்தாண்டு வாழ்த்துகள் !!!

    ReplyDelete
  2. //
    நோயுற்றுக் கிடப்போரை
    நோகாமல் கவனித்திடுவோம்
    பாய் எனக் கிடப்போரை
    பரம்பால் புடைத்திடுவோம்
    //

    நாங்க Bed-ல தான் தூங்குறது..இப்ப என்ன பன்வீங்க !!!!

    ReplyDelete
  3. பெரிய..... வாழ்த்து. நன்றாக இருந்தது. புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  4. நண்பரே!
    உங்களது கவிதையை படித்து பிடுத்து உலகுக்கு சொல்லிவிட்டேன்

    ReplyDelete
  5. நன்றி அ.மு.செய்யது.

    நன்றி அமுதா

    நன்றி வால்பையன்

    ReplyDelete