Wednesday, December 9, 2009

அருள் புரிய வேண்டும்!

இறைவா
தாயின் கருவறையில்
தலைச்சுமை ஏதுமின்றி எனை
தங்க வைத்தாய்...

தரைக்கு வந்த பின்னே
பல சுமைகளை
என் மீ ஏன் ஏற்றிவைதாய்?

சுகமான சுமைகளை
என் இதயம் ஏற்றுக்கொள்ளும்
சுகமாக என்மீது ஏற்றிவை..

துடிக்கின்ற என் இதயத்தின்மீது
துளைபோடுகின்ற துயரங்களை
தூசாக எண்ணி வீசாதே?

உறவை ஏற்றுக்கொள்ளும்
என் இதயம்
பிரிவை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது...

இன்பத்தை ஏற்றுக்கொள்ளும்
என் இதயம்
துன்பத்தை ஏற்றுக்கொள்ள வெறுக்கின்றது...

இன்பமும் துன்பமும்
எனக்கு நீ கொடுத்த வரம்தான்
இருப்பினும்...
இன்பத்திலே திளைக்கிறேன்
துன்பத்திலே இறக்கிறேன்.

எனக்கு மட்டும்
துன்பம் ஏன் என
எதிர்க்கிறேன் உன்னை நான்?

கருப்பு நிறம் கொண்ட
என் காலுக்கு
செருப்பு இல்லையென கோவிலிலே
உன்னை கடிந்து கொண்டேன்.

வருகின்ற பாதையிலே
வாலிபன் ஒருவன்
கோலூன்றி வந்தான்
காலின்றி அங்கே?

அங்கே ஊனமுற்றது
அவன் கால் அல்ல
உன்னை கடிந்த என் இதயம் தான்.

நல்லதிடம் கொண்ட கால்களை
எனக்களித்த என் இறைவா
எப்படி நன்றி சொல்லுவேன்
என் இறைவா.

இருப்பதே போதுமென்று
எண்ணுகின்ற எண்ணம்
எனக்கு வேண்டும்.

கிடைத்ததே அரிது என்று
கிளர்ச்சி பெறும்
மனம் வேண்டும்.

எதிர்பார்ப்பு எதுவுமின்றி
என்கடமை தீர
எனக்கோர் அருள்புரிய வேண்டும்.

என்றும் நட்புடன்...ராஜா பழனிசாமி.

Sunday, October 18, 2009

உண்மையான நண்பன்!

தினம்தோறும்
நீர் ஊற்றினால்
நல்கனியை நமக்களிக்கும்
நல்லதொரு வாழை மரம்
அதைப்போல பல நண்பனுண்டு

வாரம்தோறும்
நீர் ஊற்றினால்
தெம்பூட்டும் இளநீரை
தென்னை நமக்களிக்கும்
அதைப்போல பல நண்பனுண்டு

எதிர்பார்ப்பு எதுவுமின்றி
எல்லோர்க்கும் பலனளிக்கும்
பிறதிபலன் பார்க்காமல்
நற்பலனை நமக்களிக்கும்

பனைமரம்போல் ஒரு
நண்பன் நீ மட்டும்தான்!

என்றும் நட்புடன்...ராஜா பழனிசாமி

Tuesday, September 8, 2009

இடமில்லையே ஏன்?

நெற்றியிலே ஒட்டி உறவாட
சுட்டிக்கு இடமுண்டு
கன்னத்திலே கொஞ்சி விளையாட
மஞ்சளுக்கு இடமுண்டு
கழுத்திலே கவிபாட
கருகமணிக்கு இடமுண்டு
மார்பிலே மன்றாட
தாவணிக்கு இடமுண்டு
இடுப்பிலே இணைந்தாட
ஒட்டியாணத்துக்கு இடமுண்டு
காலிலே கலந்தாட
கொழுசுக்கு இடமுண்டு
உயிரற்ற இவைகளெல்லாம்
உன்னோடு உறவாட
உயிருள்ள எனக்கு மட்டும்
இடமில்லையே ஏன்?

Friday, August 28, 2009

அம்மா...அம்மா.

கருவறையில் எனை சுமந்த
களங்கமற்ற தாயே!
எனைப் பெற்றெடுக்
பெருந்துயரப்பட்டாய் நீயே!

எனக்கு உயிர் கொடுத்த
உத்தமி நீயே!
என் மீது பாசம் வைத்த
பத்தினியும் நீயே!

நடமாடும் தெய்வம்
தாயே நீயல்லவோ? உன்
நலம் காத்திடும்
நல்மகன் நானல்லவோ?

உன்னுயிர் மூச்சை
முத்தமாய் எனக்களித்த தாயே!
என்னுயிர் முழுவதையும்
மொத்தமாய் தருவேன் நானே!

பட்டினி நீ இருந்து -என்
பசி தீர்த்த தாயே! உன்
பாதத்தில் தவமிருப்பேன்
பலஜென்மம் நானே!







Friday, August 21, 2009

என் இதயச் சிறைக்கு விடுமுறை!

அடியே உனை நான்
என் இதயச் சிறையில் அடைத்து வைத்திருக்கிறேன்
விடுதலை இல்லை என்றும் உனக்கு...
தப்பிக்க நினைத்தால் தண்டித்திடுவேன்
தடியால் அல்ல...என் சொல்படியால்
விடுதலை உண்டு உனக்கு
ஒருநாள்
இறைவன் என் இதயச்சிறைக்கு
விடுமுறை கொடுக்கும்போது.

Monday, August 10, 2009

என் இதயம் இழந்திருக்கும்!

அடிப் பெண்ணே !
நீ வருந்தாதே
உன் தாகம் தீர்க்க நான் ஆற்று நீர் அல்ல
நான் கிணற்று நீரடி பெண்ணே - ஒரு போதும்
வற்றமாட்டேன்
ஒருநாள் கிணற்றுநீரும் வற்றிவிடும் -ஆனால்
என் இதயக் கிணற்றிலிருந்து பாசமெனும்
நீர் மட்டும் வற்றாது
ஒருவேளை வற்றிஇருந்தால்...
என் இதயம் தன் துடிப்பை இழந்திருக்கும்.

என்றும் நட்புடன்....ராஜா

Monday, August 3, 2009

இளைஞர்களே வாருங்கள்

அன்பிருக்கும் ஏழைகள்
அடகுவைத்தனர் அறிவை
அறிவு இல்லாத
அரசியல் வாதிகளிடம்

வீதயிலே நடந்து வந்து
சாதி ஓட்டு கேட்டிடுவார்
நிதி கொடுத்து
நீதியை வாங்கிடுவார்

வாய்தவறி வருகின்ற
வார்த்தைகளை எல்லாம்
வாக்குறுதிஎன நமக்கு
வாக்கரிசி போட்டிடுவார்

தேனாகப் பேசிடுவார்
தேர்தலில் நிற்கும்போது
பாம்பாக சீறிடுவார்
பதவியில் அமரும்போது

நரம்பில்லாத நாக்குகொண்டு
நான்குஆயிரம் சொல் பேசிடுவார்
நான்கு வார்த்தை பேசமாட்டார்
நாற்க்காளிஇல் அமர்ந்தபின்னே

படிப்பறிவு இல்லாதோர்
பாராளுமன்றம் செல்லுகின்றனர்
படித்து பட்டம் பெற்றோர்
பாமரனைப்போல் வாழ்கின்றனர்

கற்றகல்வி எல்லாம்
கறைபடிந்து போனதப்பா
பெற்ற பட்டம் எல்லாம்
பெரும்துயரப் படுதப்பா










Thursday, July 30, 2009

வேண்டாத நோய்

குங்குமமப் பொட்டு வைத்து
குலமகள் காத்திருக்க

கொஞ்சி விளையாட மனமின்றி

மிஞ்சிச் சென்றுவிட்டான்

வஞ்சி அவளிடம்


வீட்டு முற்றத்திலே

முல்லைக்கொடி பூத்திருக்க

முகர்ந்து பார்க்க மனமின்றி

முண்டியடித்துச் சென்றான்

மூதேவி அவளிடம்

முகம் துடைக்க

முந்தானை கொடுத்தவளை

முகம் நோக்கி

முறைப்பது ஏனோ?

முகத்துக்கு முகம்

முந்தானை விரிப்பவளை

முகம் நோக்கி

முத்தமிடுவது ஏனோ?



Thursday, July 16, 2009

புன்னகைப் பூ

புன்னகைப் பூ ஒன்று
புதுச்சேலை கட்டுதம்மா
புத்துணர்ச்சி கொண்டு
புன்னகை சிந்துதம்மா

வெட்கப்பட்டு வெட்கப்பட்டு
வீதி வழி போகுதம்மா
நீதி வழி தவறாமல்
கலி உலகில் வாழுதம்மா.

Friday, July 10, 2009

ஒரு நூறாண்டு!

உன் மீது எனக்கோர் மோகமடி
உன்னால் நோகுது என் தேகமடி
உன்னருகே நானிருந்தால் போதுமடி
உனைப்பிரிந்தால் என்மனம் வாடுதடி
உன்னை நினைக்க ஒரு நொடி போதுமடி
உன்னை மறக்க ஒரு நூறாண்டு ஆகுமடி.

Wednesday, April 1, 2009

என் தோழி நீ...

தினம்தோறும் உனைப் பார்க்க விரும்புகிறேன்
தினமுழுதும் உனை நினைக்க விரும்புகிறேன்
தினசரியை தினம் மறந்து
தினம் உனைப் படிக்க விரும்புகிறேன்
அதிகாலை சுப்ரபாதம் சுகம் மறந்து - உன்
சிரிப்பொலி கேட்க விரும்புகிறேன்
உளமார நான் பேச - உன்னருகில்
அமர விரும்புகிறேன்
உடல் அழகை சிலை வடிக்க கல் உண்டு - உன்
உள்ளதை சிலை வடிக்க -
என் இதயத்தைத் தர விரும்புகிறேன்...
கண்ணுக்கு காட்சி தரும் கன்னியர் ஆயிரம்பேர் -என்
கண்ணுக்குள் காட்சி தரும் கன்னி நீ ஒருத்தி
உளி கொண்டு எழுதினால்...உயிரற்றுப்போகும் என்று
நம் நட்பை
என் உதிரத்தால் எழுதினேன் பாறையில்...
என்னைப்போல் உனை நினைக்கிறேன்
என்னைவிட உனை மதிக்கிறேன்.
endrum natpudan...raajaa

Sunday, March 29, 2009

என்னவள் இதயத்தில்...

உண்ணுகின்ற உணவில் கூட
உன் பெயர் எழுதப்பட்டிருக்கும் - அது
உனக்குத்தான் என்று...
எண்ணுகின்றேன் நானும்
என்னவள் எனக்குத்தான் எனில்
என் பெயர் எழுதப்பட்டிருக்கும்
என்னவள் இதயத்தில்.

என்றும் நட்புடன்...ராஜா

Monday, February 23, 2009

என் பிரியமான தோழி

என் தோட்டத்தில் நீ ஒரு பூச்செண்டு

என் வீட்டில் நீ ஒரு செல்லக் கன்று

என் வானத்தில் நீ ஒரு நட்சத்திரம்

என் இதயத்தில் நீ ஒரு அழியாத ஓவியம்.

என்றும் உன் பசுமையான நினைவுகளுடன்...ராஜா

Friday, January 2, 2009

மனிதன்

சாதி எனும் பெயரைச்சொல்லி
மனதை சங்கடப்படுத்தாதே
மதம் எனும் பெயரைச்சொல்லி
மனதை இரணம் ஆக்காதே
மொழி எனும் பெயரைச்சொல்லி
வன்முறைக்கு வழி செய்யாதே
மனிதன் எனும் பெயரைச்சொல்லி
மனதை மகிழச்செய்.

கருத்து

என் கவிதையில்
கரு இருந்தால் சொல்லுங்கள்
தினம்தோறும் பிரசவிக்க முயல்கிறேன்...
பிழை இருந்தால் சொல்லுங்கள்
மீண்டும் பிரசவிக்க கருவாக முயல்கிறேன்.

வியர்வைத்துளிகள்

என் இதயம் நனைந்தது
ஆம்
உன் இடுப்பு
மடிப்புகளில் வழிந்த வியர்வைத்துளிகளால்.

வேகத்தடை

உன் இடுப்பு மடிப்பு கூட
ஒரு வேகத்தடைதான்
ஆம்
என் கண்கள் ஏறி இறங்கும் போது.