Tuesday, January 22, 2013

பெண்ணொருத்தி நீ!

பொங்கி வரும் காவிரியும் தன்
புகழ் கெட்டுப் போகலாம் !

கரை புரண்டு ஓடிவரும்
கங்கையும் மாசு பட்டுப் போகலாம்  !

சுடுகின்ற சூரியனும் தன்
திசை மாறி உதிக்கலாம் !

குளிர்கின்ற சந்திரனும் தன்
நிலைமாறிப் போகலாம்!

குன்றாத மலையும் தன்
நிலை குலைந்து போகலாம்!

வற்றாத கடலும் தன்
பெற்ற புகழ் அழியலாம்!

வீசுகின்ற காற்றும்
விரதம் கொள்ளலாம் !

சுட்டெரிக்கும் நெருப்பும்
சுரனை கேட்டுப் போகலாம்!

நீல வானம் கூட தன்
நிறம் மாறிப் போகலாம்!

பொறுத்தாலும்   பூமிகூட தன்
பொறுமை இழந்து போகலாம்!

என் நிலை உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
எனை வெறுக்காத பெண்ணொருத்தி நீ!

கொசு


கொசுஒன்று சேலைகட்டி
கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதம்மா!
நெஞ்சத்திலே நல்ல அன்பு வைத்து
நித்தம் சிரிக்குதம்மா !
தலையசைத்துப் பேசும்போது
மலையளவு சந்தோசம்!
வாயசைத்துப் பேசும்போது
வானளவு சந்தோசம்!
கண்ணாடி அணிந்த கொசு
கலகலன்னு பேசும் கொசு!
காத்தடிச்சாப் பறக்கும் கொசு
திம்மலுக்கே திசை மாறிப்போகும் கொசு !
காமாட்சியை துணைக்கழைத்து
காபி குடிக்கப் போகும் கொசு !
கவுண்ட் நிறையக்கொடுத்து
கைதட்டல் வாங்கும் கொசு!
சக்கரைக்கிட்ட மட்டும்
சந்தோசமாப் பேசும் கொசு
என்கிட்ட மட்டும்
எப்போதும் சண்டை போடும் கொசு!
பாராட்ட மலர் மாலை சூட வந்தால்
பாவம் மயங்கிப் போகும் இந்தக் கொசு!
புதுக்கவிதை நான் எழுதி
புகழ் மாலை சூட வந்தேன்.   என் இனிய கொசுவுக்கு

என்றும் நட்புடன்...ராஜா பழனிசாமி 

கொடுக்கலாம்.

கொடுக்கலாம்.
காசு இன்றி
கல்வி பயில்வோருக்கு
கடன் கொடுத்து வாழலாம்...

பசியோடு வந்தவர்க்கு
உணவு கொடுத்து
உன்னதமாக வாழலாம்...

ஆடை இல்லாதோர்க்கு
புத்தாடை வழங்கி
புனிதத்தைத் தேடலாம்...

பார்வை இழந்தோருக்கு
பாதை காண்பித்து
வழிகாட்டியாக மாறலாம்...

உறங்க இடமற்றோர்க்கு
இடம் அளித்து  -நல்
இதயத்தைக் காட்டலாம்...

தடிஊன்றி
தடுமாறும்
உள்ளத்துக்கு கொஞ்சம்
தயவு காட்டலாம்...

நன்மை செய்வோரை
நாளும் நினைத்து
நல்ல அன்பை நிலைநாட்டலாம்..

துன்பம் செய்வோரை
தூக்கத்திலும் நினைக்காமல்
துயரற்று வாழலாம்..

உன்னையே
நினைப்பவர்க்கு
உள்ளத்தையே கொடுக்கலாம்..

உனக்காக
வாழ்வோர்க்கு
உன் உயிரையும் கொடுக்கலாம்.