Friday, August 28, 2009

அம்மா...அம்மா.

கருவறையில் எனை சுமந்த
களங்கமற்ற தாயே!
எனைப் பெற்றெடுக்
பெருந்துயரப்பட்டாய் நீயே!

எனக்கு உயிர் கொடுத்த
உத்தமி நீயே!
என் மீது பாசம் வைத்த
பத்தினியும் நீயே!

நடமாடும் தெய்வம்
தாயே நீயல்லவோ? உன்
நலம் காத்திடும்
நல்மகன் நானல்லவோ?

உன்னுயிர் மூச்சை
முத்தமாய் எனக்களித்த தாயே!
என்னுயிர் முழுவதையும்
மொத்தமாய் தருவேன் நானே!

பட்டினி நீ இருந்து -என்
பசி தீர்த்த தாயே! உன்
பாதத்தில் தவமிருப்பேன்
பலஜென்மம் நானே!







Friday, August 21, 2009

என் இதயச் சிறைக்கு விடுமுறை!

அடியே உனை நான்
என் இதயச் சிறையில் அடைத்து வைத்திருக்கிறேன்
விடுதலை இல்லை என்றும் உனக்கு...
தப்பிக்க நினைத்தால் தண்டித்திடுவேன்
தடியால் அல்ல...என் சொல்படியால்
விடுதலை உண்டு உனக்கு
ஒருநாள்
இறைவன் என் இதயச்சிறைக்கு
விடுமுறை கொடுக்கும்போது.

Monday, August 10, 2009

என் இதயம் இழந்திருக்கும்!

அடிப் பெண்ணே !
நீ வருந்தாதே
உன் தாகம் தீர்க்க நான் ஆற்று நீர் அல்ல
நான் கிணற்று நீரடி பெண்ணே - ஒரு போதும்
வற்றமாட்டேன்
ஒருநாள் கிணற்றுநீரும் வற்றிவிடும் -ஆனால்
என் இதயக் கிணற்றிலிருந்து பாசமெனும்
நீர் மட்டும் வற்றாது
ஒருவேளை வற்றிஇருந்தால்...
என் இதயம் தன் துடிப்பை இழந்திருக்கும்.

என்றும் நட்புடன்....ராஜா

Monday, August 3, 2009

இளைஞர்களே வாருங்கள்

அன்பிருக்கும் ஏழைகள்
அடகுவைத்தனர் அறிவை
அறிவு இல்லாத
அரசியல் வாதிகளிடம்

வீதயிலே நடந்து வந்து
சாதி ஓட்டு கேட்டிடுவார்
நிதி கொடுத்து
நீதியை வாங்கிடுவார்

வாய்தவறி வருகின்ற
வார்த்தைகளை எல்லாம்
வாக்குறுதிஎன நமக்கு
வாக்கரிசி போட்டிடுவார்

தேனாகப் பேசிடுவார்
தேர்தலில் நிற்கும்போது
பாம்பாக சீறிடுவார்
பதவியில் அமரும்போது

நரம்பில்லாத நாக்குகொண்டு
நான்குஆயிரம் சொல் பேசிடுவார்
நான்கு வார்த்தை பேசமாட்டார்
நாற்க்காளிஇல் அமர்ந்தபின்னே

படிப்பறிவு இல்லாதோர்
பாராளுமன்றம் செல்லுகின்றனர்
படித்து பட்டம் பெற்றோர்
பாமரனைப்போல் வாழ்கின்றனர்

கற்றகல்வி எல்லாம்
கறைபடிந்து போனதப்பா
பெற்ற பட்டம் எல்லாம்
பெரும்துயரப் படுதப்பா