Wednesday, December 31, 2008

சொந்தம்

கர்ப்பம் என்பது
கன்னியர்க்கு மட்டும்
காதல் என்பது
காதலிப்பவர்களுக்கு மட்டும்

கணவன் என்பவன்
மனைவிக்கு மட்டும்
மனைவி என்பவள்
கணவனுக்கு மட்டும்

கற்ப்பு என்பது
இருவர்க்கும் பொதுவானது!

Tuesday, December 30, 2008

புத்தாண்டு வாழ்த்துகள்

பொங்கி வரும் காவேரி என
பொங்கட்டும் புது வாழ்வு
சீறிவரும் காளைபோல
சிரிக்கட்டும் புது வருடம்

வருகின்ற மகிழ்ச்சிகளை
மூளையில் வைப்போம்
வந்த துன்பங்களை
மூலையில் வைப்போம்

வீசுகின்ற தென்றலுக்கு
ஜன்னல் திறப்போம்
வீசிய சூறாவளிக்கு
வாதில் அடைப்போம்

வருகின்ற காலம்
வசந்த காலம் ஆகட்டும்
வீசுகின்ற காற்றெல்லாம்
தென்றல் காற்றாகட்டும்

வருகின்ற மழையால்
மரங்களெல்லாம் சிரிக்கட்டும்
வருடுகின்ற மகிழ்ச்சியால்
மனமெல்லாம் மகிழட்டும்

வருகின்ற புத்தாண்டு
புத்துணர்ச்சி கொடுக்கட்டும்
காழ்ப்புணர்ச்சி இல்லாமல்
விழிப்புணர்ச்சி உண்டாகட்டும்

கையில் காசு வைத்திருப்போர்
இல்லாதவர் பையில் வையுங்கள்
பையில் வைத்திருப்போர்
இல்லாதவர் கையில் கொடுங்கள்

கட்டுகின்ற கட்டிடமெல்லாம்
கல்விமையம் ஆகட்டும்
தீட்டுகின்ற திட்டமெல்லாம்
திறன்பட செயல்படட்டும்

சாதி மதம் இல்லையென
சான்றிதல் கொடுப்போம்
சமத்துவம் ஒன்றேயென
தம்பட்டம் அடிப்போம்

வறுமையே இல்லை என
வாழ்த்திடலாம் வாருங்கள்
திறமை இருக்கும் இடத்தை
போற்றிடலாம் வாருங்கள்

அநாதை இல்லங்களை
அரவணைக்க வாருங்கள்
ஊனமுற்ற குழந்தைகளுக்கு
ஊக்கம் கொடுக்க வாருங்கள்

அன்பிருக்கும் இடத்தை
ஆதரிப்போம் வாருங்கள்
குணம் இருக்கும் இடத்தை
கும்பிடலாம் வாருங்கள்

முதியோர் இல்லங்களை
மூட வைப்போம்
பெற்றோரை விரட்டியடித்த
மூடர்களை முதுகில் அடிப்போம்

பெற்ற தாய்க்கு
பெருமை சேர்ப்போம்
நற்ற மரக்கன்றை
நாளும் வளர்ப்போம்

கல்வி கற்றவரை
அரசியலுக்குத் தேர்ந்தெடுப்போம்
குடும்ப அரசியலுக்குக்
கொல்லிப் போடுவோம்

கலை வளர்க்கும்
கலைஞர்களை க்குவிப்போம்
கொலை செய்யும் வெறியர்களை
கூண்டோடு அழிப்போம்

வேலையில்லாத திண்டாட்டத்தை
வேரறுக்க செய்திடுவோம்
பட்டினிஇல்லாத பாரதத்தை
பரந்து விரியச்செய்வோம்

நோயுற்றுக் கிடப்போரை
நோகாமல் கவனித்திடுவோம்
பாய் எனக் கிடப்போரை
பரம்பால் புடைத்திடுவோம்

இல்லம் இல்லாதவர்க்கு
இருக்க இடம் கொடுப்போம்
கல்வி கல்லாதவர்க்கு
கல்வி கற்றுக்கொடுப்போம்

படிக்காதவர்களே இல்லை என
பறை சாற்றிடுவோம்
இல்லாதவர்களே இல்லை என
இதயம் திறந்து சொல்லிடுவோம்

நிழல் தரும் மரங்களை
நெடுகெங்கிலும் வைப்போம்
நிஜம் சொல்லும் மனிதர்களை
நெஞ்சத்தில் வைப்போம்

சுவை தரும் கனியை
தினம் தோறும் உண்போம்
சுகம் தரும் பாடலை
தினம்தோறும் கேட்போம்

--------------என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

என்றும் நட்புடன்...ராஜா பழனிசாமி

Monday, December 22, 2008

வேலை வேண்டும்!

பட்டிக் காட்டை விட்டுவிட்டு
பட்டணத்தைத் தேடி வந்தேன்
பாடாய்ப்படுகிறது மனம்
பாழும் வேலையின்றி.

பலவற்றைக் கற்றறிந்தும்
பழமொழிகள் தெரிந்திருந்தும்
பாழும் வேலையின்றி
பரிதவிக்கிறது மனம்.

தேடிப் பார்க்கிறேன்
தினம்தோறும் வேலையை
தினசரிப் படிக்கிறேன்
தினப் பத்திரிக்கையை.

வேலையைத் தேடித்தேடி
வேதனைதான் மிச்சம்
அறிவைத் தேடித்தேடி
அமைதி இழந்ததுதான் மிச்சம்.

கேள்வி கேட்ப்பவனுக்கு
கேள்வி சாதாரணம்
பதில் அளிப்பவனுக்க்கு
படபடப்பே சதா மரணம்.

கேட்க்கின்ற கேள்வியெல்லாம்
படிக்காத பகுதியில்தான்
அளித்த பதில்களெல்லாம்
கேள்விக்கு எதிராகத்தான்.

செல்லுகின்ற இடமெல்லாம்
செல்லாதா காசுதான்
கொல்லுகின்ற கேள்விகளால்
குமுறுகிறது மனம்.

முடிந்த ஒன்றுக்காக
முழங்கால் போடுகிறது மனம்
முடியாத ஒன்றுக்காக
முழங்கை போடுகிறது மனம்.

இழந்த ஒன்றுக்காக
இளைப்பாறத் துடிக்கிறது மனம்
மறக்க நினைத்த ஒன்றை
நினைக்கத் துடிக்கிது மனம்.

பூத்த பூக்களையெல்லாம்
மாலையாகக் கோர்ப்பதில்லை
படித்தவர்களை எல்லாம்
வேலையில் அமர்த்துவதில்லை.

வாடியப் பூக்களைப்போல்
வாடிய முகங்கள் சிலபேர்
வாசனை இழந்த மலர்களைப்போல்
வேதனை சுமந்த பலபேர்.

காட்டை விற்றுவிட்டு
கணிப்பொறி கற்றறிந்தேன்
சாட்டையை விட்டுவிட்டு
சாப்ட்வேர் கற்றறிந்தேன்.

கனவுக் கோட்டையிலே
கொடிகட்டிப் பறந்தேன்
கம்ப்யூட்டர் துறையிலே
கோட்டை விட்டுவிட்டேன்.

மண்வெட்டியோடு உறவாடி
மண்ணோடு விளையாடிஇருந்தால்
மனக் கவலை இல்லை
மாண்டு போகும் வரை.

பேனாவோடு விளையாடி
தானாக வந்தது வினை
தேனாக நினைத்த கல்வி
தேளாகக் கொட்டுகிறது.

மாதச் சம்பளம் கிடைக்குமென்று
மனக்கோட்டை கட்டிஇருந்தேன்
தினச் சம்பளம்தான் எனக்கென்று
தெய்வம் தீர்மானித்துவிட்டது.

திறமையை இழக்கிறேன்
தினம் தினம் தோல்வியால்
தடுமாறி நிற்கிறேன்
தடம்புரண்ட பாதையில்.

வட்டிக்குப் பணம் வாங்கி
வாழ்க்கைநடத்தும் நிலைமாறி
நிலையான சுகம் காணும்
தலையாய வரம் வேண்டும்.

கனவுத் தொழிற்சாலை
காணாமல் போகுமுன்னே
கடவுளே நீ இருந்தால்
கருணை காட்டிடு வேலைக்கு.

என்றும் நட்புடன்....ராஜா பழனிசாமி

இதயமே பேசு!

நான் விரும்பிய இதயத்தை நீ அறிவாய்
நீ விரும்பிய இதயத்தை நான் அறிவேன்
இருந்தும்...
உன் இதயத்தை நான் விரும்புகிறேன்
இருந்தும்...
உனை விரும்பும் என் இதயத்தை நீ ஏற்க்க மறுக்கிறாய்!
உன் இதயத்தைத் துரத்தும் என் இதயத்தை நீ வெறுக்கிறாய்!
காதல் தோல்வி இருவர்க்கும் பொதுவானது
பொதுவான நம் தோல்வி புது வாழ்வில் முடியும்
பேசாத உன் இதயம் பேசினால்!

இணைவது எப்போது?

காமத்தை முன் வைத்து
உன் உருவத்தை என் கண் வைத்துப்பார்த்தேன்
நாளாக நாளாக
காமம் கானல் நீர் ஆகி
காதல் அரும்பியது என் உள்ளத்தில்
அழகுப் பெண்களிலே உன் கண்களை மட்டும் ரசிக்கிறேன்
உன் உள்ளத்தை கொள்ளை கொள்ளத் துடிக்கிறேன்
என் நலம் நான் மறந்து
உன் நலம் விசாரிக்கிறேன்
நம் நலம் ஊரார் கேட்க
நாம் இணைவது எப்போது?

Saturday, December 20, 2008

வாசகம்

வாழைக்கு ஒரு குழைதான்
வாழ்க்கைக்கு ஒரு துணைதான்
வாரிசுக்கு ஒரு பிள்ளைதான்
வாழ்க்கையில் இனி இல்லை ஒரு தொல்லை தான்.

என் நண்பன்

என்ன தவம் செய்தேனடா
என் நண்பன் நீயாக
என்ன தவம் செய்வேனடா
உன் நண்பன் நானாக

கண்ணுக்குள் வைத்திருக்கிறேன்
கருவிழியாக உன்னை
காற்று தூசி பட்டாலும்
கசக்க மாட்டேன் கண்ணை

கண்ணைக் கசக்கினால்
கருவிழியே நீ அழுவாய்
கருவிழி நீ அழுதுவிட்டால்
கலங்கிவிடும் என் இதயம்.

Friday, December 19, 2008

விருந்து கொடு

கண் கண்ட பெண்களிலே
என் உள்ளம் கண்ட பெண் நீ ஒருத்தி
எனைக் கடந்து பலபெண்கள் போனாலும்
உன் பாதச்சுவடுகள் மட்டும் என் இதயத்தில்
உனை மறக்க நினைத்து
என் இதயம் பறக்க நினைத்தாலும்
மீண்டும் உன் நினைவுகள் என் இதயத்தில்...
உனை மறக்க எனக்கோர் மருந்து கொடு
இல்லையேல்
உன் மடியில் எனக்கோர் விருந்து கொடு.

தாவணிக்கு மவுசு

நகரத்துப் பெண்ணை மனம் நாடிச்சென்றாலும்
கிறங்குதடி என் மனம் கிராமத்துப் பெண்ணைத்தேடி
சுடிதாரைக் கண்டு மனம் சொக்குதடி
உன் தாவணியைக் கண்டு மனம் தடுமாருதடி.

எட்டுக்கால் பூச்சி

எட்டுக்கால் பூச்சிகூட
கட்டுதடா தன் வீட்டை
வான் எட்டுகின்ற அறிவிருந்தும்
மனிதன் கட்டவில்லை ஒரு வீட்டை.

தென்னம் பிள்ளை

நான் பெற்றுடுத்த பிள்ளை
எனை ஒரு மூலையில் வைத்தான்
ஒரு மூலையில் நான் நட்டு வைத்த தென்னை
என் பசி ஆற்றுகிறது.

இதயம் நொறுங்குதடி

கவர்ச்சி ஆடை நீ உடுத்தி
என்னைக் கலங்க வைத்தாலும்
உன் இடுப்புச் சேலை விலகும்போது
என் இதயம் நொறுங்குதடி.

பெங்களூர் பிடிஎம் லேயவுட் லேக்

காதலனா காதலியா யாரறிவார்?
கட்டி அணைக்கின்றனர்
காட்டு முத்தம் கண்ட இடங்களில் கொடுக்கின்றனர்
வருகின்ற அன்பர்களுக்கெல்லாம்
வாரி வழங்குகின்றனர் இன்ப சுகத்தை
காமம் வெறுத்த முனிவனும் இங்கு வந்தால்
தன் தவம் துறந்து முத்தம் கொடுக்க முயன்றிடுவான்
நித்தம் வருகிறார்கள் சிலபேர்
இங்கு முத்தம் கொடுக்க
நித்தம் பலபேர் வருகின்றனர் இதைப் பார்க்க
வருவோரில் நாங்களும் உண்டு.

Thursday, December 18, 2008

காத்திருப்பேன்!

வறுமையே ஏன் என் இளமையைத் தின்றாய்?
ஏழ்மையே ஏன் என் இளமையை நோகடித்தாய்?
வாய்மையே ஏன் என் இளமைக்குப் பகையானாய்?
இல்லாமையே ஏன் என் இளமைக்கு இடையுரானாய்?
இன்பமே ஏன் என் இளமைக்கு எதிரியானாய்?
துன்பமே ஏன் என் இளமைக்கு துனைபோனாய்?
என் இளமையை வறுமை தின்றாலும்
என் திறமையை நம்பி வாழ்கிறேன்
என் துன்பம் எனைத் துரத்தினாலும்
நான் நிற்காமல் ஓடுகிறேன் என் இலட்சியத்தை நோக்கி
எனக்கோர் காலம் கனியும் வரை காத்திருப்பேன்?

என் காதலுக்கு என்ன பதில்?

அடியே!
எனை மறந்து உன்னை நினைத்தேன்
எதிர்காலம் நீயென வாழ்ந்தேன்
ஆனால்
உனை நினைத்த எனை நீ மறந்தாய்
உனை விரும்பிய என் இதயத்தை நீ வெறுத்தாய்
என் காதலுக்கு நீ தொடர்புள்ளி வைத்திருந்தால்
நான் மகிழ்ந்திருப்பேன்
நீ முற்றுப்புள்ளி வைத்திருந்தால் நான் மறந்திருப்பேன்
கேள்விக்குறி வைத்ததினால்
பதிலுக்கு பரிதவிக்கிறது என் காதல்!

என்றும் நட்புடன்... ராஜா பழனிசாமி

பொங்கட்டும் கண்ணீர்

வருகின்ற துன்பங்களை
வாசலிலே நிறுத்திவை
வருடுகின்ற இன்பங்களை
வாவென்று வாழவை

இருக்கின்ற கண்ணீரை
இப்பொழுது அழுது தீர்க்காதே-நான்
இறக்கும் தருணத்தில் உன்
இரு விழிகளிலும் பொங்கி வழியட்டும்.

Saturday, December 13, 2008

நான் அவன் இல்லை

கவிதையில் விளையாட - நான்
கம்பனும் இல்லை
காமத்தில் விளையாட - நான்
கண்ணதாசனும் இல்லை
பாட்டில் விளையாட - நான்
பாரதியும் இல்லை
இசையில் விளையாட - நான்
இளைய ராஜாவும் இல்லை
வரிகளில் விளையாட - நான்
வைரமுத்துவும் இல்லை
வேடத்தில் விளையாட - நான்
கமலும் இல்லை
பாவனையில் விளையாட - நான்
சிவாஜியும் இல்லை
சாதனையில் விளையாட - நான்
சச்சினும் இல்லை
புகழில் விளையாட - நான்
புரட்சித் தலைவரும் இல்லை
காவியத்தில் விளையாட - நான்
கலைஞரும் இல்லை
இவர்களை எல்லாம் விரும்பும் - ஒரு
இதயம் நான்.

என்றும் நட்புடன்...ராஜா பழனிசாமி

நான்கு வரிகள் (மூன்று)

தெரிவித்த நம் காதல்
தெருவுக்கு வந்தது
தெரியாத உன் காதல்
கருவுக்கு வந்தது.

நான்கு வரிகள் (௨)

வார்த்தையில் தடுமாறினால்
வாக்கியம் பாழாகும்
வாலிபத்தில் தடுமாறினால்
வாழ்க்கையே பாழாகும்.

பங்கு கொடு

பாடுபட்ட பணத்தில் வேண்டாம் பங்கு
தேடிய சொத்தில் வேண்டாம் பங்கு
கிடைக்கின்ற சுகத்தில் வேண்டாம் பங்கு
படுகின்ற துன்பத்தில் பாதி பங்கு கொடு!

என்றும் நட்புடன்...ராஜா பழனிசாமி

நான் கவிஞன் ஆகிறேன்

சிலை வடிக்கும் சிற்பி கூட
சிதைந்து போவான் உன் சிரிப்பொலி கேட்டால்
மென்மையும் தோற்றுப்போகும் உன் மேனி பட்டால்
கருமையும் அதன் கர்வம் தாழ்த்தும் உன் கார் கூந்தளைக்கண்டால்
மஞ்சளும் மயக்கம் கொள்ளும் உன் கன்னத்தைக்கண்டால்
வாழைத்தண்டும் அதன் வழவழப்பை இழக்கும்
உன் கால்களைக்கண்டால்
வாழ்க்கையில் உன்னை வர்ணிக்க நினைத்தேன் உன் கணவனாக
முடியவில்லை அதனால்தான்
வார்த்தையில் வர்ணிக்கிறேன் நான் கவிஞனாக!

என்றும் நட்புடன்....ராஜா பழனிசாமி

இதயத்தில் கண்ணீர்

என் கண்களில் கண்ணீர்
அவள் கல்லால் அடித்ததால்
என் இதயத்தில் கண்ணீர்
அவள் சொல்லால் அடித்ததால்
கண்களில் வழிகின்ற கண்ணீரை
கைவிரலால் துடைத்திடுவேன்
என் இதயத்தில் வழிகின்ற கண்ணீரை
எதைக்கொண்டு துடைப்பேன்?

நான்கு வரிகள்

கவிதைக்கு உண்டு ஒரு இலக்கணம்
காதலுக்கு இல்லை ஒரு தலைக்கனம்
எனை நினைக்கணும் நீ ஒருகணம்
அதை நினைத்து நான் உருகணும் .

குப்பைக் குழந்தை

காமத்துக்குப் பாய்விரித்து
கர்ப்பபையில் இடம் கொடுத்து
கருவறையில் எனை வளர்த்து
தெருவிலே போட்டுவிட்டாய்
காம வேதனையும் சுகமும்
உனக்குப் பத்து நிமிடம்
நீ சுமந்தது பத்து மாதம்
பலபேர் எனை அழைப்பது
"அனாதை" என்று பலவருடம்
பால் கொடுத்து வளர்க்கவேண்டிய
எனை நீ பாழக்கிவிட்டாய்
தாலாட்டி வளர்க்க வேண்டிய
எனை நீ தவிர்த்துவிட்டாய்
கருவிலே எனை நீ அழித்திருந்தால்
கவலையற்று இறந்திருப்பேன்
பெற்றுத் தெருவினிலே விட்டதினால்
தேடி அழைகிறேன் தினம்தோறும்
எனைப் பெற்றுடுத்த பெரும்தாய் யாரென்று?