Wednesday, December 9, 2009

அருள் புரிய வேண்டும்!

இறைவா
தாயின் கருவறையில்
தலைச்சுமை ஏதுமின்றி எனை
தங்க வைத்தாய்...

தரைக்கு வந்த பின்னே
பல சுமைகளை
என் மீ ஏன் ஏற்றிவைதாய்?

சுகமான சுமைகளை
என் இதயம் ஏற்றுக்கொள்ளும்
சுகமாக என்மீது ஏற்றிவை..

துடிக்கின்ற என் இதயத்தின்மீது
துளைபோடுகின்ற துயரங்களை
தூசாக எண்ணி வீசாதே?

உறவை ஏற்றுக்கொள்ளும்
என் இதயம்
பிரிவை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது...

இன்பத்தை ஏற்றுக்கொள்ளும்
என் இதயம்
துன்பத்தை ஏற்றுக்கொள்ள வெறுக்கின்றது...

இன்பமும் துன்பமும்
எனக்கு நீ கொடுத்த வரம்தான்
இருப்பினும்...
இன்பத்திலே திளைக்கிறேன்
துன்பத்திலே இறக்கிறேன்.

எனக்கு மட்டும்
துன்பம் ஏன் என
எதிர்க்கிறேன் உன்னை நான்?

கருப்பு நிறம் கொண்ட
என் காலுக்கு
செருப்பு இல்லையென கோவிலிலே
உன்னை கடிந்து கொண்டேன்.

வருகின்ற பாதையிலே
வாலிபன் ஒருவன்
கோலூன்றி வந்தான்
காலின்றி அங்கே?

அங்கே ஊனமுற்றது
அவன் கால் அல்ல
உன்னை கடிந்த என் இதயம் தான்.

நல்லதிடம் கொண்ட கால்களை
எனக்களித்த என் இறைவா
எப்படி நன்றி சொல்லுவேன்
என் இறைவா.

இருப்பதே போதுமென்று
எண்ணுகின்ற எண்ணம்
எனக்கு வேண்டும்.

கிடைத்ததே அரிது என்று
கிளர்ச்சி பெறும்
மனம் வேண்டும்.

எதிர்பார்ப்பு எதுவுமின்றி
என்கடமை தீர
எனக்கோர் அருள்புரிய வேண்டும்.

என்றும் நட்புடன்...ராஜா பழனிசாமி.