Friday, August 28, 2009

அம்மா...அம்மா.

கருவறையில் எனை சுமந்த
களங்கமற்ற தாயே!
எனைப் பெற்றெடுக்
பெருந்துயரப்பட்டாய் நீயே!

எனக்கு உயிர் கொடுத்த
உத்தமி நீயே!
என் மீது பாசம் வைத்த
பத்தினியும் நீயே!

நடமாடும் தெய்வம்
தாயே நீயல்லவோ? உன்
நலம் காத்திடும்
நல்மகன் நானல்லவோ?

உன்னுயிர் மூச்சை
முத்தமாய் எனக்களித்த தாயே!
என்னுயிர் முழுவதையும்
மொத்தமாய் தருவேன் நானே!

பட்டினி நீ இருந்து -என்
பசி தீர்த்த தாயே! உன்
பாதத்தில் தவமிருப்பேன்
பலஜென்மம் நானே!







2 comments:

  1. கொஞ்சம் செயற்கையா இருக்கு!

    ReplyDelete
  2. காதலைப் பற்றி கவிதை எழுதுவோர் அதிகம். காதலிக்காக கோவில் கட்டுவோர் அதிகம். ஆனால் பெற்றத் தாய்க்கும் தந்தைக்கும் மரியாதை கொடுப்போர் மிகவும் குறைவு. இதுவரை நான் என் தாய் தந்தைக்கு நல்ல மகனாக இருந்து வருகிறேன். திருமணத்திற்குப் பின்னரும் என் மனமும் பாசமும் என்றும் மாறக்கூடாது, நான் மட்டும் அல்ல தாய் மீது தணியாத அன்பு கொண்ட ஒவ்வொரு மகனும் தன் தாய் தந்தையைப் பற்றி உயர்வாக மதிக்கணும். இன்னும் நான் கவிதையை நிறைவு செய்யவில்லை. இந்த கவிதைக்கு நீண்ட எல்லை உண்டு. என் தாய் தந்தை தான் என் உணர்வு என் உயிர் எல்லாம்.

    ReplyDelete